Published:Updated:

பெங்களூரு குண்டுவெடிப்பு: துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு !

பெங்களூரு குண்டுவெடிப்பு:  துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு !
பெங்களூரு குண்டுவெடிப்பு: துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு !
பெங்களூரு குண்டுவெடிப்பு:  துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு !

பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில டிஜிபி லால் ருக்மா பச்சாவு," இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுபேற்கவில்லை. ஊடகங்கள்தான்  இந்தியன் முஜாஹிதீன், அல்கய்தா போன்ற  தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருப்பதாக எழுதுகின்றன.

இந்தச் சம்பவத்தை துப்பு துலக்குவதற்காக டெல்லி தேசிய புலனாய்வுத்துறை, ஹைதராபாத் தடயவியல் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் வந்து ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர். பொது மக்கள் யாருக்கேனும் குண்டு வெடிப்பு பற்றி தகவல் தெரிந்து, அது பற்றி துப்பு கொடுத்தால் அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

##~~##
இதனிடையே இந்த குண்டு வெடிப்பில் காயமுற்று பெங்களூரு நிம்ஹ‌ன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 16 பேரை மாநில முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்து சிக்கிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய்  அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

-இரா.வினோத்

-படங்கள்:
ந.வசந்தகுமார்