Published:Updated:

தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)

தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)
தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கண்மாய்க்குள் கொட்டப்பட்டிருந்த பழைய துப்பாக்கி தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யார் கொண்டு வந்தார்கள்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
 

தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கண்மாய்க்குள் தற்போது தண்ணீர் வற்றி விட்டது. தண்ணீர் இல்லாத கண்மாய் வழியாக மக்கள் சென்று வருகிறார்கள். அப்போது அங்கு அரைகுறியாக புதைந்து கிடந்த தோட்டாக்களை அம்மக்கள் பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஏ.கே-47, 303, கே.விமிஷின்கன், ரிவால்வெர் உள்ளிட்ட துப்பாக்கிகளுக்கு பயன்படுத்திய தோட்டாக்கள் அதில் இருந்தன. அவற்றின் மொத்த எடை 25 கிலோ இருக்கும் என்கிறார்கள்.
 

தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)

இது குறித்து போலீஸார் சிலரிடம் பேசினோம், ‘‘கடந்த 2009ஆம் ஆண்டும் இதே பகுதியில் இதேபோன்று தோட்டாக்கள் சிக்கின. அத்துடன் இரும்பு சாமான்களும் கிடந்தன. அதேபோல்தான் இதிலும் கிடந்தது. எங்கோ பயிற்சி கொடுக்கப்படும் இடத்திலிருந்து கழித்த இந்த பொருட்களை யாரோ பழைய விலைக்கு வாங்கி பழைய இரும்பு சாமான்களை என்ன செய்வார்களோ அது போன்று செய்ய முயற்சி பண்ணியிருக்காங்க. இது தவறு என பயந்து அதை அப்படியே தூக்கி கண்மாய்க்குள் போட்டிருக்காங்க. தண்ணீர் வற்றினதும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் சாதாரணமாக நினைத்து விட்டுவிடாமல் இது எங்கிருந்து வந்தது யார் கொண்டு வந்தார்கள்? என்பதை கண்டுபிடிக்க உத்தரவிடபட்டிருக்கிறது’’ என்றார்கள்.
 

தூத்துக்குடி அருகே கண்மாய்க்குள் கிடந்த தோட்டாக்கள் (படங்கள்)

விபரம் தெரிந்தவர்கள் சிலர், ‘‘வெளிநாட்டிலுள்ள பழைய பொருட்களை மொத்தமாக வாங்கி அதை நாட்டுக்கு கொண்டு வந்து அதிலுள் உருப்படியான பொருட்களை தேடிப்பிடித்து எடுக்கும் கும்பல் இந்த பகுதியில் இருக்கிறது. 2009ல் உருப்படியாக தேடிப்பிடித்தால் அவர்களை கண்டுபிடித்திருக்கலாம். அதிகாரிகளில் அலட்சியத்தை பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் இப்படி அடுத்த நாடு சுத்தமாக இருக்க நம்ம நாட்டை குப்பைகளாக்குகிறது. தீப்பிடிக்கிற வீட்டில் கிடைக்கிறது மிச்சம் என்பார்கள். அப்படி இலங்கை போன்ற தொடர் வன்முறை நாடுகளில் எளிதில் கிடைக்க கூடிய இது போன்ற பொருட்களை எப்படியோ சேகரிக்கிற கும்பல் இது போன்று நம்ம நாட்டை குப்பையாக்குகிறது. இதில் ஏதாவது வெடி பொருட்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை’’ என்கிறார்கள்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரனிடம் பேசினோம், ‘‘எங்கோ பயிற்சி கொடுக்கிற இடத்திலிருந்து யாரோ வாங்கி வந்திருக்கலாம். விற்க முடியாமல் இப்படி போட்டிருக்கலாம். 2009ல் 350 கிலோ அதே இடத்தில் இதுபோன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக இன்னமும் கிடக்கலாம். விசாரிச்சிக்கிட்டிருக்கோம். விரைவிலே இது குறித்த தகவல் வெளியாகும்’’ என்றார்.

நேற்றும் விசாரித்தீர்கள் இன்றும் விசாரிக்கிறீர்கள் நாளையும் விசாரிப்பீர்கள்! ஆனால் ஏதாவது நடக்குமா என்றுதான் தெரியவில்லை?

எஸ்.சரவணப்பெருமாள்

படம்:
ஏ.சிதம்பரம்