Published:Updated:

பெங்களூர் குண்டுவெடிப்பு: 8 பேரிடம் போலீசார் விசாரணை!

பெங்களூர் குண்டுவெடிப்பு: 8 பேரிடம் போலீசார் விசாரணை!
பெங்களூர் குண்டுவெடிப்பு: 8 பேரிடம் போலீசார் விசாரணை!
பெங்களூர் குண்டுவெடிப்பு: 8 பேரிடம் போலீசார் விசாரணை!

பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூரின் மல்லேசுவரத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 11 போலீசார் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணை தொடங்கி உள்ள நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான தகவல்களை கொண்டு 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த வீடியோவில், 2 பேர் பா.ஜனதா அலுவலகம் முன்பாக பைக்கை நிறுத்தி வைப்பதாக பதிவாகியுள்ளது.

##~~##
இந்நிலையில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேரிடமும், பெங்களூரை சேர்ந்த 3 பேரிடமும், கேரளவை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.