Published:Updated:

நாமக்கல்: பிளஸ்2 தேர்வில் காப்பியடிக்க உதவிய பள்ளி நிர்வாகி கைது!

நாமக்கல்: பிளஸ்2 தேர்வில் காப்பியடிக்க உதவிய பள்ளி நிர்வாகி கைது!
நாமக்கல்: பிளஸ்2 தேர்வில் காப்பியடிக்க உதவிய பள்ளி நிர்வாகி கைது!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டுமேட்டில் பிளஸ் 2 மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய பள்ளி நிர்வாகி கைது  செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள 3 ஆசிரியர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைப்பெற்றது. 11.3.2013 அன்று இயற்பியல் தேர்வின் போது நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டுமேட்டில் உள்ள காமராசர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, அதே பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை வெளியில் உள்ள போர்டில் எழுதியும், ஜன்னல் வழியாக விடைத்தாள்களை கொடுத்தும் வந்தார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்வு கண்காணிப்பாளர் உடனே தேர்வுத் துறைக்கு புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த தேர்வு மையத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து, அருகில் உள்ள செல்லப்பம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத உத்தரவிட்டது. தேர்வு துறையின் பரிந்துரைப்படி இந்த முறைக்கேட்டை நாமக்கல் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து பள்ளி காவலாளி முருகேசன், கிளர்க் செல்வக்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் யுவராஜ் ஆகிய மூவரும் கைது செய்து தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறைக்கேட்டில் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

##~~##
காமராசர் பள்ளியில் பணிபுரியும் வரலாற்று ஆசிரியர் பிரபு, இயற்பியல் தேர்வு நடைப்பெற்ற நாளில் ராசிபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்துள்ளார்.  அங்கிருந்து பிளஸ் 2 வினாத்தாளை தன் மொபைல் மூலம் படம் எடுத்து காமராசர் பள்ளியின் நிர்வாகி அருண்குமாரின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
இதை இயற்பியல் ஆசிரியர் சரவணனிடம் காண்பித்து உடனே கேள்விகளுக்கான பதில்களை தயார் செய்து அட்டையில் எழுது தேர்வு மையத்தின் தேர்வு எழுதுக் கொண்டிருந்த மாணவர்களிடம் காண்பித்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சண்முக சுந்தரமும் உதவி செய்துள்ளார் என்ற உண்மைகள் தெரிவ வந்தது.
இதையடுத்து காமராசர் பள்ளியின் நிர்வாகி அருண்குமார், ஆசிரியர்கள் பிரபு, சரவணன், சண்முகசுந்தரம் ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில் நேற்றிரவு பள்ளி நிர்வாகி அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆசிரியர்கள் பிரபு, சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வீ.கே.ரமேஷ்