Published:Updated:

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)
போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருதரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக கலவரத்திற்கு தொடர்பு இல்லாத பலரை கைது செய்து வரும் காவல்துறையை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் ராமேஸ்வரத்தில் உள்ள இருதரப்பினருக்கு இடையேயான மோதலாக வெடித்தது. போலீஸாரின் தாமதத்தால் மோதல் வன்முறையாக மாறியது.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

இதில் பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு என பல அசாம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. கலவரம் துவங்கி சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே போலீஸார் சம்பவ பகுதிக்கு வந்தனர். இதன் பின்னர் கலவரம் கட்டுக்குள் வந்தது. கலவரம் தொடர்பாக 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

இதில் போலீஸார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அனைத்துக்கட்சி பிரமுகர்கள் மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனிடையே தனுஷ்கோடி சென்ற பேருந்து கல்வீச்சில் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதிலும் போலீஸார் அலட்சியமாக இருந்தனர்.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு ராமேஸ்வரம் வரும் யாத்திரீகர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பயன்படும் வகையில் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் இயக்கி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக மீண்டும் பிரச்னை எழவே போலீஸார் மீண்டும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதே வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

இந்தநிலையில் நேற்று காலை கலவரத்தில் தொடர்பில்லாத சிலரை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதும், வேலைக்கு சென்று கொண்டிருந்த சிலரையும் பிடித்து வந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் நகர் காவல் நிலையம் முன் கூடினர். போலீஸில் பிடிபட்டவர்களின் குடும்பத்தினரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு 7மணியளவில் பிடிபட்டவர்கள் மீது கடந்த 22ஆம் தேதி நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

போலீஸாரின் இந்த ஒருதலை சார்பான நடவடிக்கை கண்டித்தும், கலவரத்தில் தொடர்பில்லாதவர்கள் மீதான பொய் வழக்கினை கைவிட வலியுறுத்தியும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

போலீஸை கண்டித்து ராமேஸ்வரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் (படங்கள்)

மேலும் போலீஸாரை கண்டித்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு சர்வகட்சியினர், சமுதாய அமைப்புகள், பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். நகர் காங்கிரஸ் தலைவர் பாரிராஜன் தலைமையில் நடக்கும் இதில் செந்தில்வேல் (சி.பி.எம்), முருகானந்தம் (சி.பிஐ),கராத்தே பழனிச்சாமி (ம.தி.மு.க), முரளிதரன் (பி.ஜே.பி) உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி