Published:Updated:

சென்னையில் ரயில் கொள்ளைகள் 5 பேர் சிக்கினர்!

சென்னையில் ரயில் கொள்ளைகள் 5 பேர் சிக்கினர்!
சென்னையில் ரயில் கொள்ளைகள் 5 பேர் சிக்கினர்!
சென்னையில் ரயில் கொள்ளைகள் 5 பேர் சிக்கினர்!

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 20ஆம் தேதி, கேரளா மாநிலம் ஆலப்புழையில் இருந்து தன்பாத் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த திருப்பதியைச் சேர்ந்த செங்கல்வராயசாமி என்பவரிடம், ஒரு கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3 மோதிரம், 1 சங்கிலி உள்பட 6 சவரன் நகைகளை கொள்ளையடித்தது.

மேலும் அதேபெட்டியில் பயணம் செய்த 4 பேரிடம் ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்த அந்த கும்பல், ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டது.

இது குறித்து செங்கல்வராயசாமி பெரம்பூர் ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சென்னை சென்டிரல் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தது.

##~~##
இந்தநிலையில் நேற்று, விம்கோ நகர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக திரிந்த 5 பேரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த பாபு, பெங்களூரை சேர்ந்த சுரேஷ், கத்திவாக்கத்தை சேர்ந்த பிரதீப் குமார், ஆரப்பாகத்தை சேர்ந்த பைதுல், ஆந்திராவை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் ஆலப்புழை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமாக கொள்ளையடித்தும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, செங்கல்வராயசாமியிடம் பறித்த 6 சவரன் நகை, 15 செல்போன்கள், கொள்ளையடித்த பணத்தில் அவர்கள் வாங்கிய பிரிட்ஜ், வாஷிங்மிஷின், இருசக்கர வாகனம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.