Published:Updated:

தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)

தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)
தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)

தர்மபுரி: தர்மபுரி அருகே தொப்பூரில் டேங்கர் லாரி ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் விரிசல் ஏற்பட்டு கேஸ் வெளியானது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)
##~~##
தர்மபுரி - சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் தொப்பூர் அருகே இன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று வந்தது.
ஆஞ்சநேர் கோவில் பகுதியான மலைப் பாதையில் லாரி மெதுவாக வந்துள்ளது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி 100 பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இந்த விபத்து நடந்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்துதான் காவல்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)

டேங்கர் லாரியில் 18 டன் கேஸ் இருந்தது தெரியவந்ததோடு, லாரியில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை காவல்துறையினர் தடை செய்துள்ளனர்.

அருகில் யாரும் செல்லாத அளவுக்கு அந்த பகுதி தடை செய்யப்பட்டுள்ளதால், கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது டேங்கர் லாரி! (படங்கள்)

வெயில் வாட்டி எடுப்பதால் லாரியில் இருந்து கேஸ் வெளியேறி தீப் பிடிக்காமல் இருக்க மூன்று வாகனங்களில் தண்ணீ்ர் பீய்ச்சி அடைக்கப்பட்டு வருகிறது.

ஆபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் லாரியில் ஏற்பட்ட விரிசை சரி செய்யும் பணி தற்போது நடந்து  வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதி  என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு விரிசல் சரி செய்யப்பட்டு வருகிறது.

எஸ்.ராஜா செல்லம்