தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டைகள் கொள்முதல் செய்வதற்கு ஆண்டுதோறும் டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, சத்துணவு மையங்களுக்குத் தினமும் 50 லட்சம் முட்டைகளை சப்ளை செய்ய ரூ.480 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர், கடந்த ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தற்போது வருமானவரித் துறை ரெய்டில் சிக்கியுள்ள கிறிஸ்டி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள், ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரின் நிறுவனம் என ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்த டெண்டரை இறுதிசெய்யும் பணிகள், சென்னை தரமணியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை மையத்தில் ஜூலை 11-ம் தேதி காலை தொடங்கியது. டெண்டரை இறுதிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, மதியம் 3.30 மணியளவில் அந்த அறைக்குள் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உள்ளே நுழைந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ‘யார் நீங்கள்?’ என்று கேட்டுள்ளனர். ‘நாங்கள், டெண்டர் விடும் பணி வெளிப்படையாக நடக்கிறதா என்பதைப் பார்க்க வந்தோம். உங்கள் பணியைத் தடுக்க வரவில்லை’ என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள், ‘டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மட்டும்தான் இங்கே இருக்க முடியும்’ என்று கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதைத் தொடர்ந்து, ‘முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கக் கூடாது’ என ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை மையத்தின் இயக்குநரிடம் முறையிட அவர்கள் முயற்சி செய்தனர். அதற்கும் அதிகாரிகள் அனுமதி தரவில்லை.

சட்டப்பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகளிடம் பேசியபோது, “வழக்கமாக, டெண்டர் இறுதிசெய்யும் பணிகள் ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடும். நாங்கள் சென்றதால், மாலை ஏழரை மணி வரை டெண்டர் இறுதிசெய்யப்படவில்லை. டெண்டரை நிராகரித்துவிட்டதாக அதிகாரிகள் சொன்னார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டோம். ‘டெண்டர் விண்ணப்பத்தில், அரசின் தாய்சேய் லோகோ இல்லை’ என்றும், ‘சிலர் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடவில்லை’ என்றும், ‘முறையான ஆவணங்களை இணைக்கவில்லை’ என்றும் சொன்னார்கள்.

உண்மையில், இப்போதும்கூட கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஆதரவாகவே அரசு செயல்பட்டுள்ளது. டெண்டரை இறுதி செய்யாததால், மறு டெண்டர் கோரும்வரை, ஏற்கெனவே சப்ளை செய்த நிறுவனமே முட்டைகளை சப்ளை செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால், கிறிஸ்டியின் மூன்று நிறுவனங்கள்தான் கடந்த ஆண்டு முதல் முட்டை சப்ளை செய்கின்றன. அவையே தொடர்ந்து சப்ளை செய்யும். டெண்டரை ரத்து செய்வதற்குப் பதிலாக, நிறுவனத்தை மாற்றிக்கொடுத்திருக்கலாம். ஆந்திராவில், எல்.இ.டி திரையில் ஒளிபரப்பி, வெளிப்படையாக டெண்டர் விடுவார்கள். ஆனால், இங்கு எவ்வளவு கோல்மால் பாருங்கள்...” என்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை மையத்தின் இயக்குநர் கண்ணனிடம் பேசினோம். ‘‘டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், விதிமுறைப்படி கோரப்பட்ட ஆவணங்களை முழுமையாகத் தாக்கல் செய்யவில்லை. எனவே, டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதற்கு, வேறு காரணங்கள் ஏதும் இல்லை. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், டெண்டர் நடைமுறையைப் பார்க்க வந்தனர். அவர்களிடம் விளக்கம் தெரிவித்தோம். அவர்கள் சென்று விட்டனர். மீண்டும், கிறிஸ்டி நிறுவனத்துக்குத் தருவதற்காக இந்த டெண்டர் நடத்தப்படவில்லை. விதிமுறைப் படி யாரெல்லாம் விண்ணப்பம் செய்திருந்தார்களோ, அவர்களில் தகுதியானவர்களுக்கு டெண்டர் கொடுப்பது குறித்த பரிசீலனை மட்டுமே நடந்தது. ஏற்கெனவே சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு ஜூலை 31-ம் தேதி வரை டெண்டர் காலம் உள்ளது. அதுவரை அவர்கள்தான் முட்டை சப்ளை செய்வார்கள். அதற்குள் அரசு என்ன முடிவு செய்கிறதோ அதைச் செயல்படுத்துவோம்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி