Published:Updated:

வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை : பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றிரவு பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்ருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அந்த பெண்ணில் கழுத்தி்ல் கிடந்த தங்கை செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறி்த்து அந்த பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அப்போது, கொள்ளையடித்து சென்றவர்களின் இருசக்கர வாகனத்தின் நம்பரையும் தெரிவித்தார்.

இதையடுத்து நீலாங்கரை காவல்துறையினருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உஷாரான  போலீசார், சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தி்ல் வந்த மூன்று பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் வைத்திருந்த 4 சவரன் தங்க செயின், இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

தூத்துக்குடியை சேர்ந்த சையது அப்துல் காதர், மதுரையை சேர்ந்த யூசுப், சென்னை மதுரவாயலை சேர்ந்த   பிரிட்டோ லாரன்ஸ் ஆகியோர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.சி.ஏ படித்து வருகின்றனர்.

மதுரவாயலி்ல் தங்கியுள்ள மூன்று பேரும், கல்லூரி முடிந்து மாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். விருகம்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

##~~##
இதுவரை மூன்று பேரும் சேர்ந்த 100 சவரனுக்கு மேல் வழிப்பறி செய்துள்ளனர். கொள்ளையடிக்க 150 சிசி இருசக்கர வாகனங்களை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று மூன்று பேரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களே வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.