Published:Updated:

தண்ணீர் தண்ணீர்... கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

தண்ணீர் தண்ணீர்... கலெக்டர் அலுவலகம் முற்றுகை!
தண்ணீர் தண்ணீர்... கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

திருச்சி: திருச்சியில் குடிநீர் கேட்டு, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தண்ணீர் தண்ணீர்... கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

திருச்சியில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெயிலின் கொடுமை அதிகரித்துக்காணப்படுகிறது. அதோடு குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து விட்டது. இதனை போக்கக்கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை எடமலைப்பட்டி புதூர் பகுதியைச்சார்ந்த கவுன்சிலர் முத்துச்செல்வம் உட்பட் பல்வேறு கட்சியைச்சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அனுமதிக்க மருத்ததால் ஆட்சியர் அலுவலத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக வாயில் மூடப்பட்டது.

தண்ணீர் தண்ணீர்... கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

11 கோரிக்கைகளை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

##~~##
இதில் முக்கியமான கோரிக்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தாலுக்காவில் இருந்து 39 மற்றும் 40 வார்டுகளை மாற்றி திருச்சி தாலுக்கா அலுவலத்தோடு இணைக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரை சந்த்திக்க குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர் பின்னர் மூடிவைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
ப்ரீத்தி கார்த்திக்