Published:Updated:

சொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்

சொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்
சொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்

சென்னை: பணம், சொத்துக்காக தங்களை மிரட்டும் மகன் அறிவுநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் மு.க.முத்து மனைவி புகார் அளி்த்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மனைவி சிவகாம சுந்தரி சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று தனது மகன் அறிவுநிதி மீது புகார் அளித்துள்ளார்.

சொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்

அந்த புகார் மனுவில், "எனது மகன் மு.க.மு.அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகியோர் என்னிடம் உள்ள பணம், சொத்திற்காக தினமும் மிகுந்த தொல்லை தருகின்றனர். எங்களை ஆள் வைத்து மிரட்டுகிறார்கள்.

எங்களுக்கு சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடு உள்ளது. சில வருடங்களுக்கு முன் எங்களிடம் தந்திரமாக பேசி அந்த வீட்டை விட்டு என்னையும், என் கணவரையும் துரத்திவிட்டு அறிவுநிதி அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அனுபவிக்கிறார்.

##~~##
தற்போது, நாங்கள் வீடு இல்லாமல் கானத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இப்படிதொடர்ந்து மிரட்டி வருவதால் வயதான காலத்தில் எங்களால் இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது மிரட்டலால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை. இதனால் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும், எங்களை மிரட்டும் அறிவுநிதி, அவரது மனைவி, மாமியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று மனுவில் கூறியுள்ளார்.

படம்: முத்துக்குமார்