Published:Updated:

7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)

7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)
7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)

வேலூர்: 7 மாதமாக வீட்டில் அனாதையாக சடலம் கிடந்துள்ளது வேலூர் மாவட்டம், வேலப்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் வேலூர் வேலப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கடந்த ஏழு மாத காலமாக அவரது சடலம் வீட்டில் இருந்த தற்போதுதான் தெரியவந்துள்ளது.

வேலப்பாடி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் சிவராமன். இவருக்கு 5 சகோதரர்கள். 5 சகோதரிகள். சுமதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. கடந்த 8 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சுமதி சிவராமனிடம் வாக்குவாதம் செய்து விட்டு பெங்களூருக்கு மகன் மற்றும் மகளுடன் சென்று விட்டார்.
 

7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)

இதனால், சிவராமனிடம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்தார் மனைவி சுமதி. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி சுமதி, தனது கணவனை பார்க்க வேலூருக்கு வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று உள்ளார் சுமதி.

அப்போது, வீட்டின் உள்ளே மர்மமான முறையில் கணவர் சிவராமன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தெற்கு போலீஸார், சடலத்தை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

7 மாதமாக வீட்டில் அனாதையாக கிடந்த சடலம்: திணறும் போலீஸ் (படங்கள்)

வழக்கை விசாரித்து வரும் தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன், ‘‘தடய அறிவியல் அறிக்கை வந்த பிறகே இது கொலையா,  தற்கொலையா என்று தெரியும். எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடம் விசாரித்து வருகிறோம். இறந்து போன நபர் எப்போதும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுவார் என்று அருகில் இருந்தவர்கள் கூறுகிறார்கள். விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறோம்’’ என்றார்.

ஏ.சசிகுமார்

படங்கள்:
ச.வெங்கடேசன்