Published:Updated:

பிடிவாரண்டுக்கு பயந்து கோர்ட்டில் ஆஜரான வேலூர் எஸ்.பி.- கொலை வழக்கில் குட்டு வைத்த நீதிமன்றம்!

வேலூர்: விசாரணை கைதி கொலை வழக்கில் ஆஜராகமல் இருந்த வேலூர் எஸ்.பி ஈஸ்வரன் மீது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்ததால் இன்று அவர் நெல்லை கோர்ட்டில் ஆஜரானார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முகம்மது மசூது. சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளார். நால்வரும் சேர்ந்து கார் டிரைவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு காரை கடத்திக் கொண்டு சென்று உள்ளனர். அத்துடன், கன்னியாகுமரி ஆரல்வாய் மொழி என்ற இடத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கிவிட்டு 10 லட்சம் ரூபாய் பணத்தை யும் கொள்ளையடித்து உள்ளனர். பணத்தை பறிகொடுத்த கிருஷ்ணமூர்த்தி கன்னியாகுமரி போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கை அப்போது கன்னியாகுமரி டி.எஸ்.பியாக இருந்த ஈஸ்வரன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் விசாரித்தது. முகம்மது மசூது உள்ளிட்டவர்களை பிடித்து கீரிப்பாறை என்ற இடத்தில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முகம்மது மசூது அங்கேயே இறந்து விட்டார். ஆனால், உண்மையை மறைத்த போலீஸ், முகம்மது மசூது விசாரணையில் இருந்து தப்பி விட்டதாக சொல்லி மற்ற மூன்று பேரை மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத் தினர்.

##~~##
இதில் சந்தேகமடைந்த மசூதின் மனைவி அசனம் மால் ‘‘எனது கணவரை போலீஸ் கொன்று விட்டதாக சந்தேகப்படுகிறேன். உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்!’’என நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, டி.எஸ்.பி. ஈஸ்வரன் வேலூர் எஸ்.பியாக கடந்த வருடம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிடிவாரண்டுக்கு பயந்து கோர்ட்டில் ஆஜரான வேலூர் எஸ்.பி.- கொலை வழக்கில் குட்டு வைத்த நீதிமன்றம்!

இதனால், நெல்லை கோர்ட்டில் நடந்த மசூது கொலை வழக்கில் ஆஜராகாமல் இருந்து விட்டார். கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணக்கு வந்தபோது, ''நாளை இந்த வழக்கிற்க்கு எஸ்.பி. ஈஸ்வரன் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்!’’ என எச்சரித்தார். இதையடுத்து பதறிப்போன எஸ்.பி. இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகி கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பினார்.

-ஏ.சசிகுமார்
படங்கள்:
எல்.ராஜேந்திரன்