Published:Updated:

போலி விசா தயாரித்த இரண்டு பேர் சிக்கினர்!

போலி விசா தயாரித்த இரண்டு பேர் சிக்கினர்!
போலி விசா தயாரித்த இரண்டு பேர் சிக்கினர்!

ராமநாதபுரம்: வெளிநாட்டுக்கு அனுப்ப போலி விசா தயார் செய்த இருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

போலி விசா தயாரித்த இரண்டு பேர் சிக்கினர்!

ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் அருகில் உள்ள என்.திரவியபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (28). இவர் மலேசியாவில் கனி என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பிய ஜெயராமனை தொடர்பு கொண்ட கனி ஜெர்மனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவைபடுறாங்க. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் சரியா இருந்தா ரூ.6 லட்சம் கொடுத்தால் ஜெர்மனிக்கு அனுப்பிவிடலாம். உங்களுக்கு கமிஷனா ஒரு லட்சம் கிடைக்கும்னு சொல்லியுள்ளார்.

இதையடுத்து, ஜெயராமன் தனது நண்பரான ராமநாதபுரம் ரோஸ் நகர் முதல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (37) என்பவருடன் சேர்ந்து ஜெர்மனிக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
 

போலி விசா தயாரித்த இரண்டு பேர் சிக்கினர்!

இதில் ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 208 பேரிடம் ஜெர்மனிக்கு அனுப்புவதாக சொல்லி ஒரு கோடி ரூயாய்க்கு மேல் வசூல் செய்துள்ளனர். பணத்தை வசூலித்து பல மாதங்கள் ஆன பின்பும் பணம் கொடுத்தவர்களை ஜெர்மனிக்கு அனுப்பவில்லை.

இதனிடையே வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்காக போலி விசாக்கள் தயாரிக்கப்படுவதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸார் ரோஸ் நகரில் உள்ள ராஜ்குமார் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, 71 பாஸ்போர்ட்டுகள், 2 லேப் டாப், மொபைல் போன் மற்றும் 11லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, ராஜ்குமார் மற்றும் ஜெயராமனை கைது செய்த க்யூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வெளிநாடு செல்வதற்காக பணம் கொடுத்த யாரும் இது தொடர்பாக புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி