Published:Updated:

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)
திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தரைபாலம் வெடிகுண்டு வைத்து பாலம் உடைக்கப்பட்டது. ஒரு மீட்டர் அளவுக்கு பாலம் சேதம் அடைந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

திருச்சி சிறையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அடைக்கப்பட்டதிலிருந்து தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் கரசாணூர் - பெரும்பாக்கம் இடையே உள்ள கல்வெட்டு பாலத்தை சமூக விரோதிகள் ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் கல்வெட்டு பாலம் அருகே பயங்கர வெடி சத்தம் அப்பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி கல்குவாரிகள் இருப்பதால் அங்கிருந்துதான் வெடி சத்தம் வருகிறது என்று நினைத்து ஊர்மக்கள் வெடிசத்தத்தை அலட்டிக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

விடியற்காலையில் பாலத்தின் இரு பக்கங்களிலும் தார் சாலைகள் உடைந்தும் பாலத்தில் ஒரு  மீட்டர் அளவிற்கு சேதமடைந்ததை கண்டு ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் தடவியல் நிபுணர்கள் பாலத்திற்கு அடியில் வெடிக்காத நிலையிலிருந்த 10 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர்.

ஜெலட்டின் குச்சிகளை களிமண் கொண்டு மூடி அதனை வெடிக்கவைக்க 50 மீட்டர் தொலைவிலுள்ள டிரான்ஸ்பார்மரில் சமூக விரோதிகள் இணைத்துள்ளனர்.

திண்டிவனம் அருகே குண்டுவைத்து பாலத்தை தகர்க்க முயற்சி (படங்கள்)

ஏற்கனவே விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது பாலத்தை தகர்க்க ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியது மாவட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நா.இள அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்