Published:Updated:

சிகரெட்டால் சூடு வைத்து மனைவியை கொடுமைபடுத்திய மாணவக்கணவன் கைது

சிகரெட்டால் சூடு வைத்து மனைவியை கொடுமைபடுத்திய மாணவக்கணவன் கைது
சிகரெட்டால் சூடு வைத்து மனைவியை கொடுமைபடுத்திய மாணவக்கணவன் கைது

ராமநாதபுரம்: சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைபடுத்திய மாணவக்கணவன் மீது மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மதுரை ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் சுதானந்தம். இவரது மனைவி வெண்கலட்சுமி (33). இவர் ராமநாதபுரத்திலுள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு இதே கல்லூரியில் சர்பர்வன் (21) என்பவர் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, பேராசிரியருடன் காதலாகி திருமணமும் செய்து கொண்டார்.

##~~##
தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இவர்கள் இருவரும் குழந்தையுடன் மானாமதுரையில் உள்ள தயாபுரத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்கள். தற்போது கணவர் படிக்க செல்வதாலும், மனைவி வேலைக்கு செல்வதாலும் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்னை ஏற்பட்டது.
இதற்கிடையே சர்பர்வன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பாராம். கைகளை கட்டிப்போட்டு கட்டையாலும் அடிப்பாராம். நேற்று முன்தினம் சிகரெட்டால் வெண்கலட்சுமி உடம்பில் சூடு வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வெண்கலட்சுமி மானாமதுரை டி.எஸ்.பி. வெல்லத்துறையிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வந்த மனுவை மானாமதுரை மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பினார். மகளிர் காவல்துறை போலீசார் சர்பர்வன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்திருக்கின்றனர்.