Published:Updated:

நடிகர் சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை!

நடிகர் சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை!
நடிகர் சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை!
நடிகர் சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை!

சென்னை: தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகள் வீட்டில் 12 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி மகள் சுஸ்மிதா, சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த சின்னையா என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த 12 லட்ச ரூபாய் காணாமல் போனது. இது குறித்து சுஷ்மிதாவின் மாமனார் சிவபிரசாத், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரில், எங்கள் வீட்டில் வேலை செய்து வரும் சின்னையா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

##~~##
இந்த புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சின்னையாவை தேடி புதுக்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.