Published:Updated:

இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்

இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்
இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: மர்ம நபர்கள் பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக, நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் தொல்லை கொடுப்பதாக கூறி காஞ்சிபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி சென்ற ஆந்திர மாநில பேருந்து ஒன்று மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிப்பு சம்பந்தமாக அப்பகுதி மக்களையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்

இதனால் கடந்த 2 தினங்களாக விசாரணைக்கு பயந்த அப்பகுதி ஆண்கள் தங்கள் வீடுகளைவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் காவல்துறையினர் இரவு நேரங்களில் ஒவ்வொரு வீட்டுக்காக சென்று விசாரிப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்தது. இதை கண்டித்து இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரவில் போலீஸ் தொல்லை: பெண்கள் சாலை மறியல்

“இரவு நேரங்களில் வீடுகளை தட்டும் காவல்துறையினர், தங்கள் கணவன்மார்கள் வந்தது

##~~##
போன்று பேசி கதவை திறக்க சொல்கின்றனர். கதவை திறந்தபிறகு 'எங்கே உன் புருஷன். கூப்பிடு அவனை. பஸ்சை கொளுத்தும்போது இருந்த தைரியம் இப்போ எங்க போச்சு' என அவதூறாக பேசி தொந்தரவு செய்கின்றனர்'' என்கின்றனர் அப்பகுதி பெண்கள்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பயந்து ஊரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, 'இனிமேல் இதுபோன்று நடக்காது' என்று போலீஸ் தரப்பில் கூறியும், பொதுமக்கள் கலைந்து செல்லாததால், அவர்களில் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

-கிருபாகரன்