Published:Updated:

போர்வெல் லாரி மோதி எஸ்.ஐ பலி!

போர்வெல் லாரி மோதி எஸ்.ஐ பலி!
போர்வெல் லாரி மோதி எஸ்.ஐ பலி!

திருப்பூர்: உடுமலை அருகே போலீஸ் ரோந்து வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சிறப்பு எஸ்.ஐயும் காவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சப் -டிவிஷனுக்கு உட்பட்ட தளி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தவர் சண்முக சுந்தரம் (50).  கடந்த 1981ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த சில மாதங்களாக சுழற்சி முறையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நேற்று இரவு இவர் உடுமலை - பல்லடம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

##~~##
அண்மையில் தமிழக அரசால் புதியதாக வழங்கப்பட்ட அந்த நவீன ரோந்து வாகனத்தை திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் காவல்நிலைய காவலர் தன்னாசி (35) ஓட்டினார்.
நேற்று நள்ளிரவு குடிமங்கலம், வரதராஜபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது எதிரே வந்த போர்வெல் லாரி ரோந்து வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரோந்து வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் தன்னாசியும், சிறப்பு எஸ்.ஐ. சண்முகசுந்தரமும் சம்பவ இடத்திலேயே உயிரிழ‌ந்தனர். லாரியை ஓட்டி வந்த  டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து தலைமறைவானார்.
 இது தொடர்பாக வழக்கு பதிந்திருக்கும் குடிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-ச.ஜெ.ரவி