Published:Updated:

அடுத்தடுத்து பிண‌ங்கள்... விழி பிதுங்கும் போலீசார்!

அடுத்தடுத்து பிண‌ங்கள்... விழி பிதுங்கும் போலீசார்!
அடுத்தடுத்து பிண‌ங்கள்... விழி பிதுங்கும் போலீசார்!

தேனி: தேனி மாவட்டம், வருசநாட்டிலுள்ள வெள்ளிமலையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி கன்னிமார் ஓடை. இந்த பகுதியில் ஏற்கனவே கடந்த மூன்று மாதத்தில் ஏறக்குறைய 10 அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு பெண் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து பிண‌ங்கள்... விழி பிதுங்கும் போலீசார்!

அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள‌ மேக‌மலை வன சரணாலயத்தின் கண்காணிப்பாளர்

##~~##
சண்முகம், வழக்கம் போல தன் ரோந்து பணியில் இன்று காலை ஈடுப்பட்டிருந்தார். அப்போது 17 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி, யாராவது அவரை கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வரும் பிணங்களின் கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே போலீசார் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சண்.சரவணக்குமார்
படங்கள்:
வீ.சக்தி அருணகிரி