Published:Updated:

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)
மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

மதுரை: தமிழக வறட்சி பகுதிகளை பார்வையிட வந்த மத்திய குழுவினரை மதுரை மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு மதுரை வந்தது. மத்திய சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் மையத்தின் நிர்வாக இயக்குனர் பிரவேஷ் சர்மா தலைமையிலான இந்தக் குழு இன்று காலையில், மதுரையில் இருந்து சிவகங்கை புறப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய ஊரக வளார்ச்சித்துறை இயக்குநர் தீரஜ் ககாடியா, மத்திய குடிநீர் மற்றும் சுகாதார துணை ஆலோசகர் ஜி.பாலசுப்பரமணியன், மத்திய கால்நடை பராமரிப்புத்துறை உதவி ஆணையர் கண்ணா, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் தாமரைகண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

மத்திய குழுவினர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வழியில் அண்ணாநகர் மேம்பாலத்தில் நின்றபடி, வறண்ட வைகையாற்றைப் பார்வையிட்டனர். "ஆற்றில் கொஞ்சம் ஈரம் இருப்பது சமீபத்தில் சித்திரை திருவிழாவுக்காக தண்ணீர் திறந்ததால் தான். அதற்கு முன்பு இதைக்காட்டிலும் மோசமாக ஆறு வறண்டிருந்தது" என்று அவர்களிடம் மதுரை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், யானைமலை, ஒத்தக்கடை பகுதிக்குச் சென்ற மத்திய குழுவினர், டிராக்டரில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுவதைப் பார்த்தனர். அப்போது, திடீரென பொதுமக்கள் காலி குடங்களுடன் மத்திய குழுவினரை முற்றுகையிட்டனர். "நாங்கள் தமிழக அதிகாரிகள் கிடையாது. வறட்சியைப் பார்வையிடத் தான் வந்தோம்" என்று சொன்ன பிறகும் தொடர்ந்து அவர்களிடம் குடிநீர் பிரச்னை பற்றி புகார் கூறினார்கள் பொதுமக்கள். அவர்களை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சமரசம் செய்தார்.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

அதைத் தொடர்ந்து கருப்பாயூரணி அருகே உள்ள காளிகாப்பான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் வறட்சி பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். மழை பொய்த்ததால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போர்வெல்களில் கூட நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.

அதை குறித்துக் கொண்ட அதிகாரிகள் சிவகங்கை மாவட்டம் சென்றார்கள். நாளை மீண்டும் மதுரை மாவட்டத்திற்கு வரும் இந்தக் குழுவினர் திருமங்கலம் பகுதியில் வறட்சி பாதிப்பைப் பார்வையிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திற்குச் செல்ல உள்ளனர்.

தஞ்சையில் நிபுணர்குழு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் வல்லம் பகுதியில் புல்வெளி பகுதி, மற்றும் பண்ணைக்குட்டையை பார்வையிட்ட அதிகாரிகள் அடுத்து ஆலக்குடி பகுதியில் நடந்து வந்த உழவர் பெருவிழாவை பார்த்தார்கள். அந்தந்த கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளே ஒரு கூட்டத்தை கூட்டி வைத்திருந்தார்கள். ஆனாலும் அதிகாரிகளால் கூட்டப்பட்ட விவசாயிகளே நிபுர் குழுவிடம் தமது குறைகளை கூற முடியவில்லை. அடுத்து சித்திரக்குடி எனும் கிராமத்தில் பார்வையிட்ட அதிகாரிகள் அடுத்து ராயந்தூர் அருகில் இருக்கும் களப்பெரம்பூர் ஏரியை பார்வையிட்டார்கள். ஒரு துளி நீர் கூட அந்த ஏரியில் இல்லாததை பார்த்த அதிகாரிகள், அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பது ஆழப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் ஆலோசனை நடத்தினர். அதை குறிப்பெடுத்தும் கொண்டார்கள்.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

கடைசியாய் சீராளூர் எனும் கிராமத்திற்கு நிபுணர் குழு சென்றது. அங்கே தயாராக இருந்த ஊராட்சிமன்ற தலைவர் சால்வை அணிவித்து மத்திய நிபுணர் குழுவை வரவேற்றார். அவர் ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த கிராமத்தில் அம்மா திட்டத்தில் நடந்து வரும் பண்ணைக்குட்டையை அழைத்துப்போய் காண்பித்தார்கள். அதுமட்டுமின்றி ஒரு அங்கன்வாடி மையத்திற்கும் அழைத்து சென்றனர். இப்படி சம்பந்தமில்லாத இடங்களுக்கு அழைத்து சென்றனர் அந்த கிராமத்தை சேர்ந்த ஆளும் கட்சியினர். இப்படி தஞ்சாவூர் மாவட்டத்தை பார்வையிட்ட அதிகாரிகள் தஞ்சாவூரில் மதிய உணவை முடித்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கினார்கள்.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

இப்படி கிராமத்திற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி பார்வையிட்ட அதிகாரிகள் குறித்து விவசாயிகளிடம் பேசினோம். ''அதிகாரிகள் பார்வையிடும் பகுதிகளை தேர்ந்தெடுப்பதில் குறுபடி இருக்கிறது. இப்போது விவசாயிகளிடம் இரண்டு குறைகள் தான் இருக்கிறது. ஒன்று மும்முனை மின்சாரம் கிடைப்பது அரிதாக இருப்பது. அடுத்து தண்ணீர் பிரச்னை. இது இரண்டையுமே மத்திய அரசு நினைத்தால் சரி செய்து தரமுடியும். அதைவிடுத்து நிபுணர்கள் குழுவை அனுப்பி அவர்கள் ஏனோ தானோ பார்வையிட்டு அந்த அறிக்கையை வைத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

மத்திய குழுவினரை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள் (படங்கள்)

அதோடு, நீர் ஆதாரங்கள் வற்றிப்போன நிலையில் அதை தூர்வாரி சரி செய்யும்

##~~##
வேலை நடக்க இருப்பதாக தெரியவில்லை. இங்கிருக்கும் அதிகாரிகள் தமிழக அரசின் திட்டங்களை கொண்டுபோய் காண்பித்து அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாளைக்கே மத்திய அரசு ஒரு நிவாரண தொகையை அறிவித்தால் அதை மாநில அரசு மூலம் தராமல் நேரடியாகவே விவசாயிகளூக்கு கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. மொத்தத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் இல்லாமல், தொழில் நுட்ப வல்லுநர்கள் வேறு எதற்காகவோ பார்வையிடுவது போல் தோன்றுகிறது'' என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க திருவாரூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக ஏற்கெனவே விவசாயிகள் புலம்பி வருகிறார்கள். ஆனால் அதிகாரிகளோ, வடுவூர், மன்னார்குடி, கீழப்பாண்டி, பாண்டி, கள்ளிக்குடி, சிங்களாந்தி, பாமணி ஆகிய பகுதிகளை மட்டுமே பார்வையிட இருக்கிறார்கள்.
-கே.கே.மகேஷ், வீ.மாணிக்கவாசகம்
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ், கே.குணசீலன்