Published:Updated:

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு! - கடத்தல்காரர்கள் ஊடுருவலா?

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு! - கடத்தல்காரர்கள் ஊடுருவலா?
ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகு! - கடத்தல்காரர்கள் ஊடுருவலா?

ராமேஸ்வரம் கடற்கரையில் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய படகில் இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவினார்களா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் தெற்கு கரையூர் கடற்கரைப் பகுதி அருகே பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அந்தப் படகை சோதனையிட்டபொழுது அதில் படகு செலுத்தக் கூடிய இன்ஜின், எரிபொருள் நிரப்பப்பட்ட கேன்கள், மீன்பிடி வலைகள் ஆகியன இருந்தது தெரிய வந்தது.

இலங்கை தலைமன்னார் பகுதியில் பதிவு செய்யப்பட்ட விவரத்துடன் கரை ஒதுங்கிய அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்த  கடத்தல்காரர்கள் யாரும் வந்தனரா அல்லது அந்தப் படகில் மீன்பிடிக்க வந்த இலங்கை மீனவர்களுக்கு ஏதும் நேர்ந்திருக்குமா எனத் தெரியவில்லை. இது குறித்து மத்திய மாநில புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படகைக் கைப்பற்றிய தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழக கடலோரப் பகுதியில் இலங்கை கடல் பகுதியிலிருந்து வந்த மூங்கில் படகு ஒன்று கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.