Published:Updated:

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)
சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் முன்பு 7 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் பைனான்சியர் சண்முகம் என்பவர் டீக்கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாபு என்பவரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கன்டிஷன் ஜாமீனில் பாபு சிறையில் இருந்து வெளியே வந்தார். அதை தொடர்ந்து தினமும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பத்து நாட்களாக காலையில் கையெழுத்து போட்டு வந்தார். இவருக்கு பாதுகாப்பாக அவரது உறவினர்களும் அவருடன் வருவார்களாம்.

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

அதேபோல இன்று காலை 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடுவதற்காக, பாபு தன்னுடைய டாடா இன்டிகா காரில் அப்பா மாது, அண்ணி பூங்கொடி, சின்னம்மா சாந்தி, அண்ணன் மகன் சுரேஷ், உறவினர் மாதேஸ் என மொத்தம் ஐந்து பேருடன் வந்திருக்கிறார். இதை தினமும் நோட்டமிட்ட கூலிப்படையினர், இன்று அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு 100 அடிக்கு முன்பு பாபுவின் கார் வருவதை அறிந்ததும், அந்த கும்பலில் ஒருவன் தள்ளு வண்டியில் காலி பாட்டில்களை வைத்து பாபுவின் கார் முன்பு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறான்.

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

இதை பார்த்த பாபு காரை ஓரத்தில் நிறுத்தியிருக்கிறார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அருகில் நின்ற மாருதி ஆம்னியில் இருந்து ஐந்தாறு பேர் கையில் கட்டையும், வீச்சறிவாளோடு இறங்கியிருக்கிறார்கள். அவர்கள், ஓடிப் போய் பாபுவின் காரை சுற்றி வளைத்து அடித்து நொருக்கி கண்ணாடிகளை உடைத்து, காருக்குள் இருந்தவர்களையும் சராமரியாக வெட்டியுள்ளனர்.

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)

இதனால் காருக்குள் இருந்த பெண்கள் அலறினர். அப்போது அந்த வழியாக ராஜா என்பவர் தன் மகளின் திருமணத்திற்கு பத்திரிகை வைக்க சென்று கொண்டிருந்தார். அவர், பெண்களின் சத்தத்தை கேட்டு, ‘‘ஏப்பா பெண்களையெல்லாம் வெட்டுறீங்க’’ என்று கேட்டாராம். இதனால் கூலிப்படை கும்பல் அவரின் வயிற்றிலும் வெட்ட, குடல் சரிந்து அதே இடத்தில் அவரும் மயங்கி விழுந்தார்.

சேலத்தில் பயங்கரம்: காவல்நிலையம் முன் 7 பேருக்கு சராமரி வெட்டு (படங்கள்)
##~~##
காருக்குள் இருந்த அனைவரையும் சராமரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் ஓடிவிட்டது. இதில் அனைவரின் உடலிலும் பலத்த வெட்டுக்காயம் பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்கள். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும், காவல்துறையினரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அனைவரது உடலில் இருந்தும் குருதி ஆறாக ஓடியதால் சேலம் சூப்பர் பெஷாலிட்டி மருத்துவமனை கசாப்பு கடையை போல காட்சியளித்தது. இதில் பாபுவின் அண்ணன் மகன் சுரேஷ் குடல் சரிந்தும், கை இரண்டாக வெட்டுப்பட்டும் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்.
இது குறித்து பாபுவிடம் கேட்டப்போது, ‘‘சண்முகத்தின் அக்கா தங்கமணி தான், வளத்திக்குமார் மூலமாக கூலிப்படையை வைத்து எங்களை வெட்டியுள்ளார். அவர்கள் மூலம் தான் எனக்கு ஆபத்து என கணித்திருந்தேன்’’ என்றார். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாநகர கமிஷனர் மஹாலி, மருத்துவமனைக்கு சென்று, அனைவரையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்