Published:Updated:

கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

Published:Updated:
கும்பகோணம் அருகே இரு பிரிவினர் மோதல் - மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே, இரு பிரிவினருக்கிடையே மதச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சண்டையிட்ட ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கும்பகோணம் அருகே, திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், திருபுவனம் கடைவீதியில் சாமியானா பந்தல் மற்றும் சமையல் வாடகைப் பாத்திரக் கடை  நடத்திவருகிறார். மேலும் இவர், பா.ம.க-வில்  திருபுவனம் பகுதியின் முன்னாள் நகர கழகச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை சாமியானா பந்தல் அமைக்கும் பணிக்கு கூலித்தொழிலாளர்களை அழைப்பதற்காக திருபுவனம் ஆதிதிராவிடர் தெருவுக்குச் சென்றார். அப்போது, அங்கு  இஸ்லாமியர்கள் சிலர்  மதமாற்றச் செயலில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராமலிங்கத்துக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக்கொண்டனர். அனைத்தையும் அங்குள்ளவர்கள் செல்போனில் வீடியோ பதிவுசெய்தனர். பின்னர், சிறிது நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு,  இரு தரப்பும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து, நேற்று இரவு தனது கடையைப் பூட்டிவிட்டு லோடு ஆட்டோவில்  ராமலிங்கம் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது திருபுவனம் தெருவில் அவருடைய ஆட்டோவை கார் ஒன்று வழிமறித்துள்ளது. அதிலிருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட மர்மக்  கும்பல், ராமலிங்கத்தின் இரு கைகளை மட்டும் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு, வெட்டியவர்கள் ஓடிவிட்டனர். கைகள் வெட்டப்பட்டதால், ராமலிங்கத்திற்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. பின்னர், அந்த பகுதியில் வந்த சிலர், ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ராமலிங்கம் இறந்துவிட்டார்.

இதையடுத்து, திருவிடைமருதுார் பகுதியில் இந்து - முஸ்லிம் பிரச்னை ஏற்படும் என்பதால், தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் என மூன்று மாவட்ட எஸ்பி-க்கள், மூன்று ஏடிஎஸ்பி, 10 டிஎஸ்பி,15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீஸாருக்கு மேல் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, இன்று மதியம் ராமலிங்கத்தின் உடல் திருபுவனம் கொண்டுவரப்பட்டது. அப்போது, ராமலிங்கத்தின் உறவினர்களும், சில இந்து அமைப்புகளும் கொலையாளிகளை உடனே கைதுசெய்தால்தான் நாங்கள் உடலைத் தகனம்செய்வோம். எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். மேலும், சிலர் கொளையாளிகளைக் கைதுசெய்யக் கோரி, திருபுவனம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் திருபுவனம், திருவிடைமருதூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்பிற்கு  நிறுத்தப்பட்டிருந்தனர்.இதைத் தொடர்ந்து, வீடியோவில் உள்ள இஸ்ஸாமிய நபர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருபுவனம்  ஆதிதிராவிடர் தெருவில் இஸ்லாமியர்களோடு ராமலிங்கம் வாக்குவாதம் செய்யும் 5 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ பதிவுகள் நேற்று சமூக வளைதலங்களில் பரவியது.

''இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் திருபுவனத்தில் ஒன்றுகூடி இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்ததால், பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்'' என போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism