Published:Updated:

மரக்காணம் கலவரம்: குண்டாஸில் கைதான மாணவருக்கு போலீஸ் காவல்!

மரக்காணம் கலவரம்:  குண்டாஸில் கைதான மாணவருக்கு போலீஸ் காவல்!
மரக்காணம் கலவரம்: குண்டாஸில் கைதான மாணவருக்கு போலீஸ் காவல்!
மரக்காணம் கலவரம்:  குண்டாஸில் கைதான மாணவருக்கு போலீஸ் காவல்!

கடலூர்: மரக்காணம் கலவரத்துக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கல்லூரி மாணவர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தைசேர்ந்தவர் வீரமணி. இவர் தற்போது நெய்வேலி இந்திரா நகரில் வசித்து வருகிறார். நெய்வேலி ஜவகர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரியில் படிக்கும் போதே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால் கடந்த ஒரு வருடத்துக்கு முன் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பா.ம.க சித்திரை விழாவின் போது, மரக்காணம் அருகே நடந்த கலவரத்திற்கு வீரமணியும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் வீரமணி காலில் குண்டடிப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8ஆம் தேதி மருத்துவனையிலிருந்து தப்பிய வீரமணி, நெய்வேலி டவுன்ஷிப் வழியாக பைக்கில் வந்துள்ளார்.

அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம், வீரமணியின் பைக்கை மறித்து சோதனையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் விநாயகத்தை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் வீரமணியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

##~~##
அப்போது, வீரமணி மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ராதிகா, வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிர்லோஸ்குமாருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, வீரமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.