Published:Updated:

ஃபைன் ஃபியூச்சர் இயக்குனர்களின் ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு

ஃபைன் ஃபியூச்சர் இயக்குனர்களின் ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு
ஃபைன் ஃபியூச்சர் இயக்குனர்களின் ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு

கோவை: ஃபைன் ஃபியூச்சர் இயக்குனர்கள் ஜாமீனில் வெளி வந்ததை எதிர்த்து கோவை பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் ஐகோர்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஃபைன் ஃபியூச்சர் இயக்குனர்களின் ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ‘ஃபைன் ஃபியூச்சர்’ நிதி நிறுவனம் கூடுதல் வட்டி கொடுப்பதாக கவர்ச்சி விளம்பரம் கொடுத்ததில் ஈர்க்கப்பட்ட மக்கள் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் வட்டி கொடுத்தபதாகவும் ஒரு ஆண்டு கழித்து அசலை திருப்பி கொடுப்பதாகவும் விளம்பரம் செய்திருந்தார்கள்.

இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து இந்த நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் 818 கோடி முதலீடு பெற்றனர். அவர்கள் சொன்னதுபோல் ஒருசில மாதங்கள் மட்டும் முதலீட்டார்கலுக்கு பணத்தை கொடுத்தனர் அதன் பிறகு அவர்களால் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டார்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் புகார் செய்தனர்.

இதையடுத்து ‘ஃபைன் ஃபியூச்சர் நிர்வாக இயக்குனர்கள் விவேக் மற்றும் செந்தில் தலைமறைவாகிவிட்டனர். போலீஸ் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். சில காலம் போலீசுக்கு போக்கு காட்டி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் போலீசிடம் பிடிபடுகின்றனர். போலீஸ் அவர்களை விசாரித்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

##~~##
பொதுமக்களும், முதலீட்டார்களும் ரொம்பவே எதிர்பார்த்திருந்த இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வெளிவந்துவிட்ட்னர். இது முதலீட்டார்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘ஃபைன் ஃபியூச்சர்’ இயக்குனர்கள் ஜாமீன் பெற்றதை எதிர்த்து கோவை பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் ஐகோர்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜி.பழனிச்சாமி