Published:Updated:

சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி தொழிலாளர்கள் 47வது நாளாக உண்ணாவிரதம்

சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி தொழிலாளர்கள் 47வது நாளாக உண்ணாவிரதம்
சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி தொழிலாளர்கள் 47வது நாளாக உண்ணாவிரதம்
சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி தொழிலாளர்கள் 47வது நாளாக உண்ணாவிரதம்

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி 47 நாட்களாக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலங்காநல்லுரில் இருப்பதைப் போலவே, வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரத்திலும் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. மதுரை சர்க்கரை ஆலை என்ற பெயர் கொண்ட இந்த ஆலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

நிர்வாகச் சீர்கேடு காரணமாக கடந்த 2002ஆம் ஆண்டு திடீரென இந்த ஆலை இழுத்து மூடப்பட்டது. அதன் பிறகு இதுவரையில் ஆலை திறக்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றிய 420 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அங்கு பணிபுரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் யாருக்கும் பணிக்கொடை, இழப்பீட்டுத் தொகை, பென்சன் போன்றவை இதுவரையில் வழங்கப்படவில்லை. தற்போது அந்த தொழிலாளர்கள் பலருக்கு வயதாகிவிட்டதால் வேறு வேலைகளுக்குச் செல்லும் நிலையும் இல்லை.

இதனால், ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும், அவர்களுக்குரிய பண பலன்களை உடனே வழங்கக் கோரியும் என்.எம்.ஆர். தொழிலாளர்கள் சுழற்சி முறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

##~~##
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று 47வது நாளாக நீடிக்கிறது. ஆனால் இதுவரையில் அரசு தரப்பில் யாருமே கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுப்படைந்த தொழிலாளர்கள், நேற்று கழுதைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
"உத்தியோகமும், சம்பாத்தியமும் புருஷ லட்சணம். அது இல்லாத எங்களை கழுதைகள் கூட மதிப்பதில்லை என்பதை உணர்த்தவே கழுதைகளுடன் போராட்டம் நடத்தினோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
 கே.கே.மகேஷ்