Published:Updated:

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி கருத்தரங்கம் என்ற பெயரில் நடத்திய சீமான், இரவு 10 மணியை தாண்டி பேசினார். மேலும் பிரிவினை வாத

##~~##
இயக்கமான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் யாசிம் மாலிக்கையும் அழைத்து வந்தார்.

இதனால், கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில், பொது அமைதிக்கு கலங்கம் ஏற்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான், இன்றோ அல்லது நாளையோ எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினரிடையே பரபரப்பான பேச்சு அடிபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.