Published:Updated:

மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேர் கைது

மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேர் கைது
மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேர் கைது

சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற துணை கமிஷனர் வீரமணி. இவரது தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த மோகன், சேலம், அழகப்பனூரைச் சேர்ந்த பிரபாகரன், மகேந்திரன் ஆகியோர் இன்று அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களை வேட்டையாடி அதை, இன்டிகா காரில் போட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட 4 பேர் கைது

அப்போது அந்தப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறை ரேஞ்சர் ஜெயராஜ், காரை மறித்து சோதனையிட்டார். அப்போது அந்த கார் டிக்கில் 2 பெண் மான்களும், 3 ஆண் மான்களும் வேட்டையாடப்பட்டு, அவைகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குடல்களை எடுத்துவிட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.

##~~##
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் வனத்துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 மான்கள், ஒரு இன்டிகா கார், ஒரு துப்பாக்கி, 3 கத்தி, 2 பேட்டரி, வெடிக்காத 9 குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில், மான்களை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி, மகேந்திரனின் தாத்தாவுக்கு சொந்தமானது எனவும், பழைய மாடலான ரெட்டை குழல் துப்பாக்கியை 2012ல் தனக்கு வயதாகி விட்டது எனக்கூறி, துப்பாக்கியின் லைசென்ஸை திருப்பி கொடுத்திருக்கிறார் மகேந்திரனின் தாத்தா. ஆனால், யாருக்கும் தெரியாமல் இந்த துப்பாக்கியை எடுத்து வந்து வேட்டையாடியிருப்பதும் தெரியவந்தது.
முன்னாள் துணை கமிஷனர் மான்வேட்டையில் கைதாகியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வீரமணி மீது ஏற்கனவே மான் வேட்டையாடிய வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-பா.கந்தகுமார்