Published:Updated:

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மனநல மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மனநல மருத்துவமனையில் அனுமதி!
சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மனநல மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: சென்னையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் விஜயஹர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மனநல மருத்துவமனையில் அனுமதி!

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் நின்றபடி சினிமா பைனான்சியர் விஜய்ஹர் 2 துப்பாக்கிகளை ஆக்ரோஷமாக நீட்டியப் படியே கத்திக் கொண்டே இருந்தார். ஒருபக்கம் வேடிக்கை, மறுபக்கம் பீதியில் பொதுமக்கள் இருந்தனர்.

காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விஜய்ஹர் துப்பாக்கியை காட்டிய படியே இருந்தார். இரவு 9 மணிக்கு விஜய்ஹர் திடீரென காரில் ஏறி தப்பினார். அப்போது, அரசு பேருந்து ஒன்று முன்னால் நின்றதால் கார் செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் சினிமா பைனான்சியரை மடக்கி பிடித்தனர்.

சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பின்னர் விஜய்ஹரிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறி முதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.  பின்னர் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜய்ஹரிடம் அங்கு வைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் அவர் தெளிவான மன நலத்துடனேயே இருப்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையின் போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் விஜய்ஹர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்ட போது, குடியிருப்போர் நல சங்க தலைவர் ஜார்ஜிடம் தகராறில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்துக்காக அவரது புகாரின் பேரில் விஜய்ஹர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சட்ட விரோதமாக ஆயுதத்தை பயன்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகா பேசுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் விஜய்ஹர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூரில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டின் வீட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மனநல மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட விஜயஹர், அங்கும் கத்தி ரகளை செய்ததை தொடர்ந்து, சிறை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இன்று மாலை அவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனை அளிக்கும் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவாரா அல்லது மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.