Published:Updated:

தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகளை தமிழக அரசு அதிரடியாக மாற்றியுள்ளது.

தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா பதவி உயர்வு பெற்று, மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கமுதி உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

அரவாக்குறிச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல்ஹக் பதவி உயர்வு பெற்று, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். விடுமுறையில் சென்றுள்ள அவர், பணிக்கு திரும்பியதும் உரிய பதவி கொடுக்கப்படும்.

திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சி.விஜயகுமார் பதவி உயர்வு பெற்று, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த எம்.துரை , சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த டாக்டர் பி.விஜயகுமார், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, வேலூர் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜெ.மகேஷ் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேதாரண்யம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பதவி உயர்வு பெற்று, நாகப்பட்டினம் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெ.ராஜேந்திரன், சென்னை நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா, சென்னை அடையாறு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆர்.சுதாகர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஜி.கார்த்திகேயன், போலீஸ் பயிற்சி கல்லூரி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தனராஜ், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஆர்.திருநாவுக்கரசு, திருப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ் குமார், கோவை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் ஆகிறார்.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை போலீஸ் சூப்பிரண்டு உமா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தமிழ்சந்திரன், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

##~~##
சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெ.ரவீந்திரன், உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது பட்டாலியன் கமாண்டண்டாக பதவி ஏற்பார்.
உளுந்தூர் பேட்டை சிறப்பு காவல்படை 10-வது பட்டாலியன் கமாண்டண்ட் எஸ்.அப்துல்கனி, தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அமைப்பு சார்ந்த குற்ற உளவுப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் எம்.சுதாகர், கோவை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றும் எஸ்.பன்னீர்செல்வம், சென்னை போக்குவரத்து போலீஸ் (மேற்கு) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-வது பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றும் என்.காமினி, பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
பொருளாதார குற்றப்பிரிவு (2) சூப்பிரண்டாக உள்ள எஸ்.மணி, வீராபுரம் சிறப்பு காவல்படை கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செல்வகுமார், சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) துணை கமிஷனர் ஆகிறார்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பிரபாகரன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். எஸ்.பி.க்கு அவருடன் உதவி செய்த சில காவலர்கள் மூலம் பணம் கைமாறிவந்ததாகவும், பெரம்பலூரில் இயங்கிவரும் பெரிய கல்வி நிறுவனத்திடம் கமிஷன் வாங்கியதாக பிரச்னை ஆரம்பித்த இப்போது அவரை மாற்றும் அளவுக்கு போய் இருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.