Published:Updated:

'போலி விமானிகள்': டிஜிசிஏ அதிகாரி உள்பட 4 பேர் கைது

புதுடெல்லி, மார்ச் 26,2011

போலி விமானிகள் சிக்கி வரும் விவகாரத்தில், உள்நாட்டு விமான சேவை ஒழுங்கு அமைப்பான டி.ஜி.சி.ஏ.வின் அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ##~~##

அண்மைக்காலமாக, போலிப் பயிற்சித் தகுதிகளைக் காட்டி, விமானியாக வேலைக்குச் சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் சிக்கி வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததும் 14 விமானிகளின் உரிமங்களை  அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்திருந்தனர்.

இந்தப் போலி விமானிகள் தாங்கள் விமானம் ஓட்டிப் பயிற்சி செய்திருந்த காலத்தை பொய்யாக அதிகப்படுத்தி காட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில், டி.ஜி.சி.ஏ.வின் அதிகாரி ஒருவருடன், மூன்று பேர் கைதாகியுள்ளனர் என்றும், அதில் ஒருவர் விமானி என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மிகவும் அதிகரித்துள்ளதால், பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவையும் உயர்ந்துள்ளது.

ஆனால் அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழல் நிலவுவதன் காரணமாக இத்தகைய போலி விமானிகளும், போலி விமானிப் பயிற்சி மையங்களும் முளைத்திருக்கிறது என்பது கவனத்துக்குரியது.