Published:Updated:

டி.ஜி.பி.யை கண்டித்து 10ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

விகடன் விமர்சனக்குழு

சென்னை: தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் 17 பேர் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரியும் டி.ஜி.பி ராமானுஜத்தை சந்தித்து மனு கொடுக்க வழக்கறிஞர்கள் சென்றனர்.

ஆனால், வழக்கறிஞர்களை சந்திக்க மறுத்த டி.ஜி.பி., புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், வழக்கறிஞர்கள் மீது
காழ்ப்புணர்ச்சியுடனும், வெறுப்புணர்வுடனும் செயல்பட்டு வரும் டி.ஜி.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட உள்ளனர்.

##~~##
இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத் தலைவர் பரமசிவன், டி.ஜி.பி. ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட கோரியும்  வரும் 10ஆம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.