Published:Updated:

நடிகை லினா பாலின் காதலனை தேடுகிறது 7 மாநில போலீஸ்

விகடன் விமர்சனக்குழு
நடிகை லினா பாலின் காதலனை தேடுகிறது 7 மாநில போலீஸ்
நடிகை லினா பாலின் காதலனை தேடுகிறது 7 மாநில போலீஸ்
நடிகை லினா பாலின் காதலனை தேடுகிறது 7 மாநில போலீஸ்

சென்னை: பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நடிகர் லினா மரியா பாலின் காதலனை 7 மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர். அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கிலும், சேலையூரை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கிலும் இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும், மலையாள நடிகையுமான லீனா மரியாபால் டெல்லியில் பிடிபட்டார். பின்னர், சென்னை கொண்டு வரப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அம்பத்தூர் கனரா வங்கி மோசடி வழக்கில் போலீசார் இவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து நேற்று மறுபடியும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகாஷ் சந்திரசேகர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஏற்கனவே கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கில் போலீஸ் காவலில் நடிகை லீனாவிடம் விசாரித்த போது சுகாஷ் குறித்த சில தகவல்கள் பெறப்பட்டது.

குறிப்பாக சுகாஷ் கடந்த 10 வருடங்களாக, 'நான் தொழிலதிபர், அரசு உயர் அதிகார், சினிமா டைரக்டர்' என கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பல மாநிலத்திலும் அவர் மோசடி செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டு,  தலைமறைவாக உள்ள சுகாஷை, சென்னை, மும்பை, டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற 7 மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சேலையூர் சக்கரவர்த்தியிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியாபாலை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் லீனாவிடம் இருந்து சுகாஷ் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.