Published:Updated:

ஏர்வாடியில் 1 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்

ஏர்வாடியில் 1 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்
ஏர்வாடியில் 1 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்

ஏர்வாடியில் 1 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்

ஏர்வாடியில் 1 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை க்யூ பிரிவு போலீஸார் கைபற்றினர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போதை பொருட்களுடன் சிலர் தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் ஏர்வாடி விரைந்தனர். அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

##~~##
விசாரணையின்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த க்யூ பிரிவு போலீஸார் அவர்கள் தங்கியிருந்த அறையினை சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக அந்த போதை பொருளை மறைத்து வைத்திருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேரிடமும் க்யூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரா.மோகன்
அடுத்த கட்டுரைக்கு