Published:Updated:

ஜெயங்கொண்டம் அருகே 120 ஆண்டு பழமையான தங்க காசு பறிமுதல்!

விகடன் விமர்சனக்குழு
ஜெயங்கொண்டம் அருகே 120 ஆண்டு பழமையான தங்க காசு பறிமுதல்!
ஜெயங்கொண்டம் அருகே 120 ஆண்டு பழமையான தங்க காசு பறிமுதல்!
ஜெயங்கொண்டம் அருகே 120 ஆண்டு பழமையான தங்க காசு பறிமுதல்!

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பாழடைந்த வீட்டில் இருந்த தங்க புதையலை எடுத்து சென்றவரை கைது செய்துள்ள காவல்துறை, அவரிடம் இருந்து 70 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். இந்த தங்க காசுகள் 120 ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஓலையூர் கிராமத்தில் கிருஷ்ணப்பராஜூ என்பவரின் பாழடைந்த வீடு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் செப்பு கலசத்தை பார்த்துள்ளனர். ஆனால், சிறுவர்கள் பயந்து போய் அதை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.

இந்தநிலையில், அந்த சிறுவர்களில் ஒருவன் தன் தந்தை செல்வத்தை அழைத்துக் கொண்டு பாழடைந்த வீட்டுக்கு சென்று செப்பு கலசத்தை எடுத்து சென்றுள்ளார். அதன் பிறகு செல்வம் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர்.

இதனிடையே, செல்வம் குடும்பம் தலைமறைவானதால் பொதுமக்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து இது பற்றி ஆண்டிமடம் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

##~~##
இதையடுத்து, செப்பு கலசத்தை எடுத்த சென்ற சிறுவனின் தந்தை செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, செப்பு கலசத்தில் தங்ககாசு இருந்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து 70 தங்க காசுவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க காசு 120 ஆண்டு பழமையானவை என தெரிய வந்துள்ளது.