Published:Updated:

தாமினியின் காதலன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

தாமினியின் காதலன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
தாமினியின் காதலன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
தாமினியின் காதலன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: காரை ஏற்றி தன்னை கொலை செய்ய முயன்றதாக இயக்குனர் சேரன் மகள் தாமினியின் காதலன் சந்துரு புகார் அளித்ததையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இயக்குனர் சேரனின் மகள் தாமினி கடந்த 2ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் அளித்த புகாரில், காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சி நடப்பதாக புகார் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சந்துரு அளித்த பேட்டியிலும், காரை ஏற்றி தன்னை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றது என்றும் அவர்களிடம் இருந்து நான் தப்பித்து விட்டேன் என்றும் கூறி இருந்தார்.

##~~##
இதைத் தொடர்ந்து சென்னை சூளைமேடு வள்ளலார் தெருவில் உள்ள சந்துருவின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் தொடர்பாக சந்துருவுக்கோ, அவரது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.