Published:Updated:

புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)
புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)

புதுச்சேரி: கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே நடந்த மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)

புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரை கிழித்தனர்.

புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)

இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபப்படுத்தியது. பா.ம.க தொண்டர்கள் கலைந்து சென்ற சில மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கடந்த சில நாட்களாகவே பேனர் கிழிப்பு, தலைவர்களின் சிலைகளை உடைப்பது என தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ராமசாமி படையாட்சி, அம்பேதகர் சிலைகள் தான் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

புதுச்சேரியில் பா.ம.க.- வி.சி. மோதல்: போலீஸ் துப்பாக்கி சூட்டால் பதற்றம் (படங்கள்)

இதில் ஈடுபடும் சமூக விரோதிகளை காவல்துறையினர் இதுவரை அடையாளம் காணாமல் இருக்கின்றனர். மேலும், பேனர் கிழிப்புகளால் ஜாதி கலவரமே வெடிக்கும் அபாயத்தில் புதுச்சேரி மாநிலம் உள்ளது.

இத்தனைக்கும் மாநிலத்தில் பேனர் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இதை மாவட்ட ஆட்சியரும், நகராட்சி அதிகாரிகளும் கண்டு காணாதது போல் இருக்கின்றனர். பேனர் தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

நா.இள அறவாழி