Published:Updated:

பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 12 நாள் போலீஸ் காவல்!

பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 12 நாள் போலீஸ் காவல்!
பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 12 நாள் போலீஸ் காவல்!
பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 12 நாள் போலீஸ் காவல்!

சேலம்: பிலால் மாலிக், போலீஸ் பக்ரூதீன் ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க  நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க,  சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் இன்று சேலம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர்.

##~~##
இந்நிலையில் இந்த வழக்கில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிலால் மாலிக் மற்றும் போலீஸ் பக்ருதீனை 12 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.