Published:Updated:

சகாரா அதிபர் சுப்ரதா ராய்க்கு மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவல்!

Vikatan Correspondent
சகாரா அதிபர் சுப்ரதா ராய்க்கு மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவல்!
சகாரா அதிபர் சுப்ரதா ராய்க்கு மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவல்!
சகாரா அதிபர் சுப்ரதா ராய்க்கு மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவல்!

லக்னோ: சகாரா குழும தலைவர் சுப்ரதாவை மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என்று சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றம் சுப்ரதா ராய்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சுப்ரதா ராய் லக்னோ காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தார். அதை தொடர்ந்து அவரை உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை சுப்ரதா ராயை லக்னோ தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, சுப்ரதா ராயை மார்ச் 4ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.