Published:Updated:

காவல்துறையினர் அடித்ததில் கிளப் ஊழியர் பலி?

விழுப்புரம்: காவல்துறையினர் அடித்ததில் சூதாட்ட கிளப் ஊழியர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தாண்டவராயன் என்பவருக்கு சொந்தமான சூதாட்ட கிளப், உளுந்தூர்பேட்டையில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது. இந்த கிளப்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏடிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரெய்டு நடத்தி, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்தனர்.

அப்போது, தப்பியோடிய கிளப் ஊழியர் வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. போலீசார் தாக்குதலில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.9 லட்சம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் அடித்ததில் கிளப் ஊழியர் இறந்த சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.நந்தகுமார்