Published:Updated:

தேர்தல் பணிக்கு வருமாறு ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு திரிபாதி அழைப்பு!

Vikatan Correspondent

சென்னை: சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பணிக்கு வருமாறு ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு, கமிஷனர் ஜே.கே.திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஓய்வு பெற்ற காவல்துறையினரை நியமிக்க காவல்துறை கமிஷனர் ஜே.கே.திரிபாதி முடிவு செய்துள்ளார். இதையடுத்து, சென்னையில் வசித்து வரும் 1,200 ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு வரவேண்டும். இந்த பணிக்கான ஊதியம் உடனடியாக வழங்கப்படும். இந்த கடிதம் கிடைத்தவுடன், சென்னை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு  தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்ய கொள்ளவேண்டும்'' எனக் கூறியுள்ளார்.