Published:Updated:

கவுகாத்தி எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து பயணம் செய்யாத 8 பேர் மீது போலீசார் சந்தேகம்!

Vikatan Correspondent
கவுகாத்தி எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து பயணம் செய்யாத 8 பேர் மீது போலீசார் சந்தேகம்!
கவுகாத்தி எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து பயணம் செய்யாத 8 பேர் மீது போலீசார் சந்தேகம்!
கவுகாத்தி எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து பயணம் செய்யாத 8 பேர் மீது போலீசார் சந்தேகம்!

வேலூர்: குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, ரயிலில் ஏறாத 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை குண்டு வெடித்தது. இதில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரில் புறப்பட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்றுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் கவுகாத்தி ரயிலில் ஏறியவர்கள் மற்றும் இறங்கியவர்கள் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்து, கவுகாத்தி ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் பட்டியலை சேகரித்தனர். முன்பதிவு பட்டியலில் உள்ள முகவரியும் ரயிலில் பயணம் செய்தவர்களின் முகவரியும் சரியானது தானா அல்லது போலி முகவரி கொடுத்து யாரேனும் பயணம் செய்துள்ளனரா என்று விசாரித்தனர்.

இதில், காட்பாடி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த 8 பேர் கவுகாத்தி ரயிலில் ஏறவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த 8 பேர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்கள் ஏன் ரயிலில் ஏறவில்லை என்பது குறித்தும் அவர்கள் கொடுத்த முகவரி உண்மையானது தானா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.