Published:Updated:

சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் நேரில் விசாரணை!

Vikatan Correspondent
சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் நேரில் விசாரணை!
சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் நேரில் விசாரணை!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
 

சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் நேரில் விசாரணை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் காயமடைந்த 14 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் படுகாயம் அடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருக்கு கழுத்திலும், திரிபுராவைச் சேர்ந்த சுமந்த் தேவ்நாத்திற்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. மற்ற 12 பேரில் நான்கு பேருக்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் அனைவரின் உடல்நிலையும் நலமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் நேரில் விசாரணை!

இந்நிலையில், சிகிச்சை பெறுபவர்களிடம் ரயில்வே காவல்துறையினர், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், டெல்லியிலிருந்து வந்துள்ள உளவுத்துறை அதிகாரிகள், பெங்களூருவிலிருந்து வந்துள்ள சிறப்பு காவல்துறை குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ரயிலில் பயணித்தவர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் குறித்தும், அவர்களின் அங்க அடையாளங்கள் குறித்தும் இவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்