Published:Updated:

போலீஸ் காவல் முடிந்தது: ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு!

Vikatan Correspondent
போலீஸ் காவல் முடிந்தது: ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு!
போலீஸ் காவல் முடிந்தது: ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு!
போலீஸ் காவல் முடிந்தது: ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு!

சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான்.

இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் ஜாகீர் உசேன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.  ஜாகீர் உசேனை வரும் 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

முன்னதாக, ஜாகீர் உசேனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் கூறியுள்ளான்.

இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.