Published:Updated:

ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு!

Vikatan Correspondent
ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு!
ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு!
ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு!

சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை

ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு!

ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் கூறியுள்ளான்.

இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

அதைவிட முக்கியமாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக் மற்றும் பாஸ் என்கிற ஷா ஆகியோர் கூறியே தாம் தமிழகத்திற்கு வந்து சதிச் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து ஜாகீர் உசேன் கைது வழக்கில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக் மற்றும் பாஸ் என்கிற ஷா ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக சேர்த்து தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் உதவியை நாடவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.