Published:Updated:

50 பேருக்கு விற்பனை: போலி சான்றிதழ் பெற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை!

50 பேருக்கு விற்பனை: போலி சான்றிதழ் பெற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை!
50 பேருக்கு விற்பனை: போலி சான்றிதழ் பெற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை!
50 பேருக்கு விற்பனை: போலி சான்றிதழ் பெற்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை!

சென்னை: போலி சான்றிதழ் தயாரித்தவர்களிடம், அதனை பெற்ற  50 பேர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் பெயரில் போலி சான்றிதழ் விற்பனை செய்ததாக வியாசர்பாடியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, கொடுங்கையூரைச் சேர்ந்த ஞானவேல் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட, கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதமன் (57). வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியில் வசிக்கும் அவரது மகன் லோகேஷ் (32) ஆகியோர் போலி சான்றிதழ் தயாரித்து புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கவுதமன் மற்றும் லோகேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், கவுதமன் வீட்டில் சோதனையிட்டனர். இதில் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய 7 கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர ஒரு அட்டை பெட்டி நிறைய போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டது.

கவுதமன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், இதுவரை 50 பேருக்கு சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், ஒரு சான்றிதழ் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்ததாகவும், அவர்கள் முகவரி எனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதைதத் தொடர்ந்து, போலி சான்றிதழ் பெற்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.