Published:Updated:

கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

விகடன் விமர்சனக்குழு
கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கோவை: கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாணவ, மாணவியர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் தாக்குதல் நடத்தியதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கோவையை அடுத்த கோவைப்புதூரில் சி.பி.எம். எனும் தனியார் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரியான இங்கு, பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. இதனால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மாணவர்கள், கல்லூரியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இல்லாவிட்டால் இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இடைத்தேர்தலுக்கு பின்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

இந்நிலையில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாக முறையிட மாணவர்கள் இன்று (13ஆம் தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் விட மறுத்த போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர். போலீசாரிடம் தங்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறிய மாணவர்கள், கலெக்டரை சந்திக்க அனுமதி கோரினர். ஆனால் போலீசார் மறுத்தனர்.

கலெக்டரை சந்தித்து முறையிடாமல் திரும்பப் போவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாணவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். வர மறுத்த மாணவர்கள் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டனர். மாணவிகளும் போலீசார் தாக்குதலுக்கு தப்பவில்லை. பல மாணவிகளை போலீசார் ரோட்டில் இழுத்து சென்றனர். இதில் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தனர்.

கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

''நாங்கள் மனு கொடுக்கத்தான் வந்தோம். மக்கள் குறை தீர்கூட்டத்தில் மனு கொடுக்க அனுமதியில்லையா?. முன்னரே போலீசாருக்கு தகவல் சொல்லி விட்டுத்தான் வந்தோம். ஆனால் மனு கொடுக்க வந்த எங்களை தாக்கி, கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. பல மாணவர்கள் மயங்கியுள்ளனர். இதற்கெல்லாம் போலீசார் பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என மாணவிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்குள்ளான மாணவிகள் எழுப்பிய அலறல் சத்தத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது.

ச.ஜெ.ரவி


படங்கள் : தி.விஜய்