Published:Updated:

'ஊழல் எதிர்ப்பு' கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

'ஊழல் எதிர்ப்பு' கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
'ஊழல் எதிர்ப்பு' கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
'ஊழல் எதிர்ப்பு' கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை சென்னை புரசைவாக்கம் தானா தெருவில்  'ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டம்' நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு முறையான அனுமதி கோரி அக்கட்சியினர் மாநகர காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்னு மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென ஊழல் எதிர்ப்பு இயக்க கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று பிற்பகலில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசித்தனர்.

இதனையடுத்து அக்கட்சியின் தலைவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது.