Published:Updated:

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பஞ்சர் ஆகும் பவானி சிங்!

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பஞ்சர்  ஆகும் பவானி சிங்!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பஞ்சர் ஆகும் பவானி சிங்!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: பஞ்சர்  ஆகும் பவானி சிங்!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனுமதியின்றி ஆஜரானது ஏன்? என்பது குறித்து விளக்கம் தர பவானி சிங்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கனவே கிடுக்குப்பிடி போட்டுள்ள நிலையில், "அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை எந்த அடிப்படையில் நியமித்தீர்கள்?" என தமிழ்நாடு ஊழல் தடுப்பு பிரிவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு வழக்கறிஞராக வாதிட்டு வரும் பவானி சிங்கை நீக்கக் கோரி தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானி சிங்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், எனவே உடனடியாக‌ தமிழ அரசால் நியமிக்கப்பட்ட பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை கடந்த 30ஆம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா தலைமையிலான அமர்வு, இந்த மனு தொடர்பாக பவானி சிங் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, கர்நாடக அரசு பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்க (இன்று) உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி வகேலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், எந்த அடிப்படையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தீர்கள் என்றும், அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்றும் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வழிமுறைகள் குறித்து நாளை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனுமதியின்றி ஆஜரானது ஏன்? என்பது பற்றி விளக்கம் தர பவானி சிங்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டுள்ள நிலையில், எந்த அடிப்படையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தீர்கள் என்று தமிழ்நாடு ஊழல் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பவானி சிங்குக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.